பக்தி பரவசமுள்ளவர்களுக்கு தாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும் அத்துனை விஷயங்களையும் கடவுளின் சித்தமாகவே எண்ணுவார்கள். இப்படியான ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துவிட்ட கடவுளே உங்களுக்கு என்ன கைமாறு செய்வோம் என்றெல்லாம் பக்தி பரவசத்தில் மூழ்கி அழுது கண்ணீர்விட்டுவிடுவார்கள். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை இங்கு நடப்பது எல்லாமே கடவுளின் செய்கை என்பது முழு நம்பிக்கை. அப்படி நினைத்துக் கொண்டு வாழ்பவர்களுக்கு அவ்வப்போது சில அபூர்வ விஷயங்களும் கண்முன்னே நடக்கத்தான் செய்கிறது. அதுவே அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. இதற்கு உதாரணமான ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சின்னஞ்சிறு பறவையை சித்திரவதை செய்யும் மனித மிருகம்... மனதை பதற வைக்கும் வீடியோ!


மணல் பரப்பில் சிவனை நினைத்துக் கொண்டு செய்யப்பட்ட லிங்கத்துக்கு, நாகப்பாம்பு ஒன்று மாலையாக வந்தது காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தெய்வ பக்தியின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களின் கண்களையும் குளமாக்கியுள்ளது. இதெல்லாம் சிவனின் திருவிளையாடலே என மனதிற்குள் சிவனை வழிபடுபடவும் தொடங்கிவிட்டனர். ஆனால், இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை. வீடியோ எடுப்பதற்காக மணல் பரப்பில் சிவ லிங்கம் செய்து அதன் மீது நாகப் பாம்புவையும் மாலை ஒன்றும் வைத்துள்ளனர். 



@IMukesh_IN என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. ஜூன் 19 ஆம் தேதியான இன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றிருக்கிறது.  வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் தங்களின் கருத்துகளை பதிவிட்ட நெட்டிசன்களில், எங்கும் சிவன் இருக்கிறார் என ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொருவர் ஹரஹர மகாதேவ் என கூறியுள்ளார். இன்னும் சிலர் சிவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று, சிவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்றெல்லாம் தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | அப்பாடா மழை வந்துடுச்சு: மழையில் நாயின் குத்தாட்டம்... மீண்டும் மீண்டும் பார்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ