காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர. அவர் கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார். தற்போது அவரை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றார். ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்க்க உள்ளதால், தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து அடுத்து புதிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் யார்? என்ற கேள்விகள் எழுந்தன. அந்த பட்டயலில் ஹெச்.ராஜா, ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது.


இந்தநிலையில், தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசன் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அதிக அளவில் பலரும் அடுத்த பாஜக தலைவராக வர வாழ்த்துக்கள் என்று பதில் கருத்து பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.