அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமியைச் சேர்ந்த இந்த 21 வயது பெண் (அவா லூயிஸ்). கொரோனா வைரஸ் சவாலுக்காக (“Coronavirus Challenge”) விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் டாய்லெட் சீட்டை நாக்கால் நக்கியுள்ளார். அந்த வீடியோவை டிக் டாக் வீடியோ தளத்தில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவில் அவர்., "தயவுசெய்து இந்த வீடியோவை மறு ட்வீட் (rretweet ) செய்யுங்கள், இதனால் விமானத்தில் எவ்வாறு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்." 


செய்தி எழுதப்பட்ட நேரத்தில், இந்த வீடியோ மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 1 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அவரது இந்த செயல்களைப் கண்டித்து மக்கள் கமெண்ட் செய்துள்ளனர். 


 



 


இதற்கிடையில், அமெரிக்காவில், 4,600 க்கும் மேற்பட்ட வைரஸால் பாதித்து உள்ளனர் மற்றும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, நாடு தழுவிய அவசரநிலை கோடை இறுதி வரை அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று கூறினார்.