Watch Video: வைரல் ஆகும் `ராக்ஸ்டார் பிராவோ` வின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரருமான டுவைன் பிராவோ, கொரோனாவுக்கான ஒரு விழிப்புணர்வு பாடலை பகிர்ந்துள்ளார்.
கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு உலகை தன் பிடியில் சிக்க வைத்த இந்த வைரஸ் இன்னும் மக்களை விட்டபாடில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் தொற்றின் இரண்டாவது அலை தற்போது தீயாய் பரவி வருகிறது. இது மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பல இடங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகள் என பலவித மருத்துவ வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மனம் தளராமல் போராட பல பிரபலங்கள் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரருமான டுவைன் பிராவோ (Dwayne Bravo), கொரோனாவுக்கான ஒரு விழிப்புணர்வு பாடலை பகிர்ந்துள்ளார்.
கம்மின்சைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீயும் கொரோனா பிடியில் சிக்கியுள்ள மக்களுக்காக, ஆக்ஸிஜன் வாங்க உதவ, 41 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியா தனது இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார். தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சியில் இருந்தபோதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் தன் மீது அபார அன்பையும் பாசத்தையும் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மக்களுக்கு என்றென்றும் தன் நெஞ்சத்தில் இடம் உள்ளது என்று கூறிய பிரட் லீ, இந்தியாவில் தற்போது உள்ள நிலைமையால் தான் மிகுந்த வருத்தமடைவதாகக் கூறியுள்ளார்.
ALSO READ: IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR