Selfie, சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய ஓர் விஷயம். இதற்கு அடிமையான மனிதர்களை நாம் பார்த்ததுண்டு, ஆனால் இங்கு இரண்டு பெண்குயின்கள் Selfie-க்கு போஸ் கொடுப்பதை பாருங்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய அன்டார்டிக் பிரிவின் ஆதரவுடன் இயங்கும் ட்விட்டர் பக்கமான அண்டார்டிக் டிவிஸன் ஓர் 38 வினாடி வீடியோ கிளிப் ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு தான் இந்த பெண்குயின்கள் அழகாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


பென்குயின், அண்டார்டிக்கா பனிபிரதேசத்தில் பரவலாக காணப்படும் உயிரினம். பறவை இனத்தை சேர்ந்ததாக இருந்தால் பறக்க தெரியாத ஓர் பறவை. அண்டார்ட்டிக்கா பகுதியில் ஆராய்சிக்காகவும் சரி அழகினை ரசிக்கவும் சரி பலர் சென்றுவருகின்றனர்.


அந்த வகையில் அங்கு தங்கியிருக்கும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கௌல்ட் என்பர், தனது கேமிராவில் பிடித்த இந்த வீடியோவினை தற்போது இணைய வாயிலாக உலகிற்கு வெளிகாட்டியுள்ளார். இந்த வீடியோவில் தென்படும் பென்குயின்கள் இரண்டும் ரசிகர்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.


அந்த வீடியோவின் இணைப்பு உங்களுக்காக...