Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.   


இந்த உலகில் பலருக்கு வீடு இல்லை. சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் தங்கள் வாழ்க்கையை இவர்கள் கழிக்கிறார்கள். உலகில் இப்படிப்பட்ட மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. 


ஆனால் பொதுவாகவே துக்கத்தைப் பகிர்ந்துகொள்பவர் கிடைத்தால் துக்கமும் குறைவாகவே தெரிகிறது. பகிர்ந்துகொள்வது மனிதர்களாக இருந்தலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, துக்கம் குறைந்துதான் போகும். இதற்கு சமீபத்திய சம்பவம் ஒன்று சாட்சியாக அமைந்துள்ளது. 


வீடற்ற நபரைக் கட்டிப்பிடிக்கும் நாய்


ஒரு நாய் செய்யும் ஒரு வினோத செயலின் வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. இதை பார்த்தால் யாராலும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. இந்த வீடியோவில், வீடற்ற ஒருவரை ஒரு நாய் கட்டிப்பிடித்து ஆதரவு அளிப்பது போன்ற காட்சியைக் காண முடிகின்றது. 


ALSO READ | இது புல் தின்னும் புலி அல்ல! காரை புல் பண்ணும் புல்லர் புலி! வைரலாகும் வீடியோ 


இந்த காணொளியின் மூலம் அந்த நாய் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. மனதை உருக்கும் இந்த வீடியோவில், சோகமாக தெருவில் அமர்ந்திருக்கும் வீடற்ற ஒரு நபரை ஒரு நாய் கட்டிப்பிடித்து அன்பு காட்டுவதைக் காண முடிகின்றது. 


நாய் மனிதனின் உற்ற நண்பன் என்ற கூற்றை இந்தக் காணொளி நிரூபித்துள்ளது. @buitengebieden_ என்ற கணக்கின் மூலம் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.


 முதலில், இந்த வீடியோவில் வீடற்ற நபர் ஒருவர் சோகமாக ஒரு இடத்தில் அமர்ந்துள்ளதைக் காண்கிறோம். அந்த நபரின் அருகில் ஒரு நாயும் இருப்பது தெரிகிறது. இந்த நாய் அந்த நபரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பின்னர் யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை அந்த நாய் செய்கிறது. 


அந்த உருக்கமான வீடியோவை இங்கே காணலாம்: 



அந்த நபரின் பிரச்சனையை நாய் புரிந்து கொண்டது!


சிறிது நேரம் அந்த நபரைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாய், அவரது சோகத்தை புரிந்துகொண்டது போல, அவர் அருகில் சென்று அவரை அணைத்துக்கொள்கிறது. அந்த நபரின் சோகத்தில் பங்கெடுப்பது போல நடந்துகொள்ளும் நாயின் செயல்கள் நிகிழ்ச்சியாக இருக்கின்றன. 


இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள் நாயை வியந்து பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை 50 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் (Netizens) வீடியோவுக்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR