புலிக்குட்டிகளுடன் ஆட்டம் போடும் குரங்கு குட்டி; ஆச்சர்யத்தை கொடுக்கும் வீடியோ!
இணைய உலகம் ஆச்சர்யங்களை அள்ளி வழங்குவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. அந்த வகையில் புலிக்குட்டியுடன் ஆட்டம் போடு மனித குரங்கு குட்டியின் வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இணைய உலகம் ஆச்சர்யங்களை அள்ளி வழங்குவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. அந்த வகையில், சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில் புலிக்குட்டியுடன் ஆட்டம் போடு மனித குரங்கு குட்டியின் வீடியோ உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இயற்கை மற்றும் விலங்குகளின் அழகை ரசிப்பது நமது மனதை அமைதிப்படுத்துகிறது. டென்ஷனைக் குறைக்க்கிறது. அதிலும் குட்டி விலங்குகளைப் பார்ப்பதும், அவற்றின் குறும்புகளை ரசிப்பதும் உங்கள் இதயத்தை லேசாக்கி விடும். அந்த வகையில். இரண்டு குட்டி புலி குட்டிகளுடன் சிம்பன்சி குட்டி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தால், உங்கள் டென்ஷன் நிச்சயம் பறந்தோடி விடும்.
மேலும் படிக்க | நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட யானை! இணையத்தை கலக்கும் வீடியோ!
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
இந்த வீடியோவை மோக்ஷா பைபீ என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 9.1 மில்லியன் பார்வைகளையும் 387k லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒரு அழகான குட்டி சிம்பான்ஸி என்னும்மனித குரங்கு ஒன்று இரண்டு புலிக் குட்டிகளுடன் விளையாடுவதை பார்த்தால், நமது மனதில் சந்தோஷமும் ஆச்சர்யமும் ஒரு சேர தோன்றுவதை தவிர்க்க முடியாது.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ