கால்பந்து போட்டியின் போது எதிர் அணியின் கோலை தடுக்க தனது மகனை குறுக்கே தள்ளிவிட்டு கோல் போகாமல் தடுத்த அப்பா.....  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தந்தைகளே குழந்தைகளில் ஹீரோக்கள் என்பது இங்கிலாந்தில் ஒரு தந்தை செய்த காரியத்தால் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கால்பந்து போட்டி ஒன்றில் பந்து கோல் போகாமல் தடுக்க, மகனை தள்ளிவிட்ட தந்தையின் வீடியோ இணையதளத்தில் பலராலும் கிண்டலான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருகிறது.


இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் கோல் கீப்பர் பகுதியில் நின்ற சிறுவன் பந்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால், பந்து அந்தச் சிறுவனை தாண்டிச் செல்வது போல வந்தது.


கோல் கம்பியின் அருகே நின்றுகொண்டிருந்த நபர் திடீரென அந்த சிறுவனை தள்ளிவிட்டார். எனினும், சிறுவனால் தடுக்கப்பட்ட பந்தை மற்றொரு சிறுவன் கோல் அடித்துவிட்டான்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியிருந்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் க்றிஸ் வில்கின்ஸ், அந்த வீடியோவை பகிர்ந்ததுடன் அந்தச் சிறுவனின் தந்தைதான் தள்ளிவிட்டு கோலை காப்பாற்றியது என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, ஆண்டின் சிறந்த தந்தை விருதை அவருக்கு வழங்க வேண்டும் என கிண்டலாக பலரும் கருத்து தெரிவித்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.