கின்னஸ் சாதனைக்காக இந்தோனேசியா அதிபர் ஜோகோ பொதுமக்களுடன் தெருக்களில் போகோ போகோ நடனம் ஆடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசிய நாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆகஸ்டு 18 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெறுகிறது. 


இதனை முன்னிட்டு நீண்ட வரிசையில் கின்னஸ் உலக சாதனைக்காக தெருக்களில் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி ஆயிரக்கணக்கானோர் வரிசையாக ஜகர்த்தா நகரின் தெருக்களில் கூடி நின்று போகோ போகோ நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.


இந்த போட்டியை ஆக்ஷன் கேம்ஸ் ஆர்கனைசிங் கமிட்டி நடத்தியது, இது ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை ஜகார்த்தா மற்றும் பலாம்பங்கில் நடத்தப்படும்.