Crocodile Deer Viral Video : காட்டின் தர்மம் வேறு, நாட்டின் தர்மம் வேறு. இந்த சொற்தொடரை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். காட்டில் உயிர்கள் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்ந்துவருகின்றன. இயற்கையில் வேட்டையாடுதலும், பிற உயிர்களை உண்ணுதலும் ஒரு அங்கம்தான். பிற உயிர்களை வேட்டையாடுவதன் மூலம் காட்டின் சமநிலையை தவராமல் சூழலியலை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு அதன்பின் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இதெல்லாம் விலங்குகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், பசி. மிருகத்தனமா பசி என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தளவிற்கு மிருகங்கள் தங்களின் பசியை தணிப்பதற்காக அவை எடுக்கும் முயற்சிகளும் திட்டங்களும் அளப்பரியது.  


மேலும் படிக்க | 'ஏய் ஹெலோ மிஸ்டர் புலி’: கடுப்பேத்திய குரங்குகள், காண்டான புலி, சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


அந்த வகையில், நிலத்திலும், நீரிலும் வாழும் ஒரு முதலை தனது பசியை தீர்க்க செய்த திட்டமும், அதற்கு பலியாக காத்திருந்த மானின் சாதுர்ய செயலும் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில் புள்ளி மான் ஒன்று, ஒரு சிறு குட்டை போன்ற நீர் தேக்கத்தில் மிகுந்த வெயிலுக்கு மத்தியில் தாகத்துடனும், எச்சரிக்கையுடன் நீர் அருந்தி வருவது பதிவாகியுள்ளது. நீர் அருந்தும் போது, அந்த மான் தனது பின்னங்காலை பின்னகர்த்தி வைத்து மிகவும் எச்சரிக்கையுடன் நீர் அருந்தியது. அப்போது மின்னல் வேகத்தில் தண்ணீரில் இருந்து முதலை பாய்ந்து தாக்க, அந்த கடைசி நிமிட ட்விஸ்ட்தான் பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. 


அதை இங்கு விவரிக்கவில்லை. வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும். இந்த குறிப்பிட்ட வீடியோ ட்விட்டரில் @DisasterVideo என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 



இதுபோன்ற பார்ப்பதற்கே மிகவும் பதற்றத்தை உண்டுபண்ணும் மிருகங்களின் வீடியோக்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. இதை காண்பதற்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Viral Video: என் ஏரியாவுக்கு வந்து பிலிம் காட்டரீங்களா... கடுப்பான நீர்யானை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ