இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்பா பந்தை சேதப்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிவருகின்றன.


இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 352 ரன்கள் குவித்தது. இதற்கிடையில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அணி பந்துவீசுகையில், ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா பந்தினை சேதப்படுத்தியதாக போட்டியை கண்ட ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்தியாவின் பேட்டிங் போது 6 ஓவர்கள் வீசிய ஆடம் ஜாம்பாவிற்கு விக்கெட் ஏதும் விழவில்லை. மாறாக 50 ரன்கள் (ஓவருக்கு 8.33 ரன்கள் வீதம்) விட்டு சென்றார். இதற்கிடையில் ஆட்டத்தின் போது பந்தை அவர் சேதப்படுத்துவது போன்று வீடியோக்கள் இணையத்தில் உலா வரத்துவங்கியுள்ளது.







ஆட்டத்திற்கு இடையில் ஆடம் ஜாம்பா தனது கால் சட்டை பையில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பந்தை சேதப்படுத்துவது போன்று வெளியாகியுள்ள இந்த வீடியோவை குறிப்பிட்டு ஆடம் ஜாம்பாவின் செயல்பாட்டிற்கு ICC விளக்கம் கேர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


முன்னதாக இதேப்போன்று பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்ணர் சிக்கி மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது, ஆடம் பெயர் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.