அட்டகத்தி தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உறுவாகியுள்ள களவாணி மாப்பிள்ளை திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய ராஜபுஷ்பா பிக்சர்ஸ் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தயாரித்துள்ள திரைப்படம் "களவாணி மாப்பிள்ளை".


இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். 



ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை காந்தி மணிவாசகம் இயக்கியுள்ளார். NR ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 


விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!