Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்
வைரல் வீடியோ: இதுபோன்ற செயல்கள் மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
வைரல் வீடியோ: இமாச்சல பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், லடாக், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பி செய்த கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு என மிகவும் பாதிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்னர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கிடையில், இதுபோன்ற பல வீடியோக்களும் முன்னுக்கு வந்தன. அந்த வீடியோவை பார்க்கும் போது மக்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருந்துள்ளனர் என்பது தெரியும். இதுபோன்ற செயல்கள் மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனமழைக் காரணமாக சாலையில் வெள்ளம் போல நீர் பெருமளவில் வேகமாக செல்கிறது. அப்படி இருக்கையில், ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து அதை கடக்க முயல்கிறார்.
சுமார் 20 வினாடிகள் வைரலாகும் வீடியோவில், பிரதான சாலை முழுவதும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அப்போது மிதிவண்டியில் வரும் ஒரு நபர் அதிக வேகத்தில், அதனைக் கடக்க முயல்கிறார்.
ஆனால் வெள்ள நீரின் வேகம் அதிமாக இருந்ததால், அவர் சமநிலை இழந்து, நீரின் சுழற்சி காரணமாக நீரின் திசையில் அவரை இழுக்கத் தொடங்கியது. கீழே விழுகிறார். சைக்கிளும் கையை விட்டு செல்கிறது.
ALSO READ | Viral Video: தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த பெண் ஆசிரியர்!
சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு எப்படியோ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கரையை நோக்கி வருகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஃபன்னி வீடியோவின் கைப்பிடியில் பதிவேற்றப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR