108 என்ற எண்ணின் மகத்துவம் தெரியுமா?
பெளத்தம், ஜைனம், சீக்கியம் என இந்திய கலாச்சரங்கள் அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த எண் 108
108 என்ற எண் மிகவும் சிறப்பானது. அதிலும் குறிப்பாக இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து கலாச்சாரங்களிலும் இந்த எண் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து, பெளத்தம், ஜைனம், சீக்கியம் என இந்திய கலாச்சரங்கள் அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாக மகுடம் சூடுகிறது 108. எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பதை கேட்டிருக்கலாம்.
108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும் எண். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது. ருத்ராட்ச மாலையில் 108 எண்ணிக்கை இருப்பதன் தாத்பர்யமும் இதுதான்
எண் 9 முழுமையை குறிக்கும் எண். நவதானியம், நவமணிகள், நவராத்திரி என இந்திய கலாசாரத்தில் ஒன்பது என்ற எண்ணின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். எண் 108இன் மூன்று இலக்கங்களையும் கூட்டினால் வருவது 9. 9 என்ற எண்ணுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிப்பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18....
Also Read | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?
அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை, பிரபஞ்சத்தின் முழுமையை குறிக்கும் எண்.9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது. இதில் 9 என்ற எண்ணை12 என்ற ராசிகளின் மொத்த எண்ணால் பெருக்கினால் கிடைப்பது 108.
அதேபோல, மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் 108 பாதங்கள் உண்டு. சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ அவ்வளவு தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதனால் தான் இந்திய கலாச்சாரத்தில் 108 என்ற எண் மகத்துவம் பெறுகிறது. ருத்ராட்ச மாலை அணிபவர்கள், அதில் 108 கொட்டை இருக்குமாறு மாலை கோர்த்து அணிந்துக் கொள்வார்கள்.
READ ALSO | தொழில் செழிப்படைய 5 ஜோதிட பரிகாரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR