கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் உள்ளனர். நாம் நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும்போதும், ​​அவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் தற்போது வீட்டில் முடங்கி இருக்கும் பலரும், தாங்கள் தான் பெரிய தியாகத்தை செய்துவிட்டு வீட்டில் முடங்கி இருப்பதாய் விளம்பரம் செய்துக்கொள்கின்றனர். அப்படி சுய விளம்பரம் செய்துகொள்ளும் சிலருக்கு பாடம் புகட்டும் விதமாக, கொரோனா மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை பகிரந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், மருத்துவர்களும் தங்கள் செய்தியை வெளியுலகிற்கு தெரிவிக்க டிக்டாக்-னை பயன்படுத்தியது தான்...


கொரோனா பரவை தடுக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று சமூக விலகல் மற்றும் நம் வீடுகளுக்குள் தங்குவது. இதை நாங்கள் நிறைய பேரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் 5 மருத்துவர்களைக் கொண்ட இந்த குழு அனைவரையும் அவ்வாறே செய்யச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான வழியைக் கண்டறிந்துள்ளது.


@aubstmary

You know the deal, we’re here for you! ##PlayByPlay ##MoodBoost ##fyp ##onmybreak ##nurses ##healthcareworkers ##frontline

  Something New feat. Ty Dolla $ign - Wiz Khalifa

குழுவின் டாக்டர்களில் ஒருவரான ஆப்ரி., "நம் இடையிலான ஒப்பந்தம் உங்களுக்கு தெரியும், நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம், நீங்கள் வீட்டில் இருங்கள்" என்ற தலைப்பில் ஒரு டிக்டோக் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அனைத்து டாக்டர்களும் கேமராவை நோக்கி ஒரு நடன அசைவு செய்து, ஒரு ப்ளாக்கார்டைக் காண்பிப்பதை நாம் பார்க்கலாம். இந்த பலகைகள், இணைக்கப்படும்போது, "தயவுசெய்து எங்களுக்காக வீட்டிலேயே இருங்கள்" என்ற செய்தியைக் கொடுக்கிறது.


இந்த வீடியோ பதிவில் அவர்கள் ஏதோ புதிய பாடலில் நடனமாடுவதைக் காணலாம். ஆனால் இதுதான் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு போக்கு. விழிப்புணர்வு செய்தியை கூட வேடிக்கையாக சொன்னால் தான் மக்கள் ஏற்கின்றனர். முன்னதாக ஜெனிபர் லோபஸும் ஏ-ராட் மற்றும் அவர்களது குழந்தைகளும் இந்த வீடியோவை உருவாக்கி இந்த குறிப்பிட்ட நடன அசைவுகளை செய்தபின், அது வைரலாகியது.


உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மக்களின் மன உறுதியை உயர்த்தவும், தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுக்கவும் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜான் லெனனின் இமேஜின் என்ற பிரபலமான பாடலை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் பாடும் வீடியோவை சமீபத்தில் பார்த்தோம். அதற்கு முன்பு, ஹம் இந்துஸ்தானி படத்திலிருந்து ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சோடோ கல் கி பாட்டீன் பாடும் வீடியோவும் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தற்போது 5 மருத்துவர்கள் குழு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.