சேட்டை செய்யாத நாய் இருக்க முடியாது. வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பலருக்கும், அவை தான் என்டர்டெயின்மென்ட் என்றுகூட சொல்லலாம். காலை முதல் மாலை வரை துருதுருவென அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டே இருக்கும் செல்ல நாய்க்குட்டிகள், நிமிடம் ஒரு சேட்டை செய்துவிட்டு, ஒன்றுமே செய்யாததுபோல் முக பாவணைகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பது தான், ரியாக்ஷனின் உச்சம் என்று சொல்லலாம். செல்ல நாய்க்குட்டிகள் செய்யும் சேட்டைகள் கோபத்தை தூண்டுபவையாக இருந்தாலும், அவற்றின் ரியாக்ஷன் நம்மை கூல் செய்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!


அப்படியான ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. உரிமையாளரிடம் அந்த நாய்க்குட்டி என்ன வம்பு செய்ததோ தெரியவில்லை. கடுப்பான அவர், நாயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி பூட்டிவிட்டார். இதனால் கதவுக்கு அருகிலேயே இருந்த நாய்க்குட்டி, தன் உரிமையாளரை கூலாக்க என்னன்மோ செய்துள்ளது. அதில் எல்லாம் மனம் இறங்காத அவர், நாயின் கியூட்டான நடனத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்துள்ளார். நாய் நடனத்துடன் மன்னிப்பு கேட்கும் அந்த வீடியோவை அப்படியே டிவிட்டர் உள்ளிட்ட இணையத்திலும் பதிவு செய்துள்ளார். 



சேட்டை சேய்த குறும்புக்கார நாய்க்கு, தனக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. வீட்டுக்கு வெளியே அனுப்பி, கதவை பூட்டிவிட்டதால், அதனை எப்படியாவது திறக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே அதனுடைய எண்ணம். முன்பு செய்த குறும்பு உரிமையாளரை கோபப்படுத்திவிட்டதால், இப்போது சாந்தமான குறும்புதனத்தை செய்துள்ளது. அதாவது, ஜாலியாக ஒரு டான்ஸ். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க | ‘ஷ்ஷ்... யார் கிட்டயும் சொல்லாதீங்க’: பீர் அடித்த குழந்தை செய்த வேலை, வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ