சிங்கமும், நாயும் ஜோடியாக இருப்பதைக் கூட காட்டிற்குள் பார்க்க முடியாது. ஏனென்றால் அங்கு சிங்கத்தின் குணாதிசயம் என்பதே வெறு மாதிரியாக இருக்கும். கிடைத்தால் போதுமடா சாமி என்ற நிலையில் அங்கு எப்போதும் வேட்டைக்கு தயாராகவே சிங்கங்கள் இருக்கும். ஏனென்றால், எல்லா நேரத்திலும் எதிர்பார்க்கும் வேட்டை கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. உணவுக்கு பஞ்சமாக இருக்கும்போது சிங்கத்தின் கண்முன்னால் எந்த விலங்கும் தென்பட்டாலும், அதனுடைய வாழ்க்கை அன்றோடு முடிந்தது தான். ஆனால் பூங்காக்களில் வளர்க்கப்படும் சிங்கங்களின் இயல்பு என்பது முற்றிலும் வேறானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிங்கங்களின் தாக்குதலையே சமாளிச்சிட்டோம், இனி வேற என்ன? மிதப்பில் வரிக்குதிரை


இங்கிருக்கும் சிங்கங்கள் மாமிசத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்காது. அப்படி தீனிக்கு கொடுத்தாலும் வேட்டையாடி சாப்பிட வேண்டும் என்ற இயல்பே அதனிடம் பார்க்க முடியாது. திறந்த வெளியில் சுற்றினாலும், நாம் ஓர் இடத்தில் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்ற சிந்தனை எல்லாம் சிங்கத்திடம் இருக்காது. அப்படியான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஒரு சிங்கம் தான் இந்த வீடியோவில் வைரலாகியிருக்கிறது. அதில் சிங்கம் ஒன்று கம்முனு அமர்ந்திருக்க, அங்கு வரும் நாய்க்குட்டி தன்னுடைய நாக்கால் அதனை தடவிக் கொடுத்து சுகப்படுத்துகிறது. சிங்கத்திற்கும் அது பிடித்துப்போக, இந்தப் பக்கம் கொஞ்சம் தடவிக் கொடுப்பா என்கிற மாதிரி முகத்தை காட்டுகிறது.



இரண்டும் வாயோடு வாய் வைத்து ஒன்றையொன்று தடவிக் கொடுத்துக் கொள்ளும் சுகத்தை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கே கண்பட்டுவிடும்போல் இருக்கிறது. மிகவும் அழகான இந்த வீடியோ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு ஏராளமான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருகிறது. @_B___S என்ற டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருகிறது. இதுவரை 2.2 மில்லியன் பார்வைகளை இந்த வீடியோ பெற்றிருக்கிறது. கமெண்ட் அடித்திருக்கும் நெட்டிசன்கள், இதே மாதிரி நாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் காலை உணவு அல்லது டின்னராக மாறிவிடும் என்று காமெடியாக தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: முத்தம் கொடுக்க வந்த பெண்ணை பதம்பார்த்த பாம்பு - பாவம் பாப்பா...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ