ஒரு நாளும் இணையதளங்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்கும்படியான வேலையை நிறுத்தியதில்லை, தினமும் நம்முடைய கவனத்தை சில நொடிகள் ஈர்க்கும்படியான பல அற்புதங்கள் இணையத்தில் நிரம்பி கிடக்கின்றது.  நாம் இணையத்தில் காணும் பெரும்பாலான வீடியோக்கள் நம்முடைய சோர்வை நீக்கி புதுவிதமான உற்சாகத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது, அதிலும் நம்மை நொடிப்பொழுதில் உற்சாகபடுத்துபவை விலங்குகளின் வீடியோக்கள்.  இணைய பக்கங்களில் விலங்குகளின் வீடியோக்களை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, இந்த வீடியோக்களில் ஹைலைட் நாய் மற்றும் பூனைகள் தான்.  நாய் மற்றும் பூனைகளின் குறும்புகளை தனித்தனி வீடியோக்களில் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கும், இப்போது அந்த இரண்டு இரண்டு விலங்குகளையும் ஒரே ஸ்க்ரீனில் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 


நாய் மற்றும் பூனை இடம்பெற்றிருக்கும் அந்த க்யூட்டான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு மரத்தின் நிழலில் சுவரின் ஓரமாக ஒரு பூனை படுத்திருப்பதை பார்க்க முடிகிறது, அந்த பூனைக்கு நேரெதிரே நாய்க்குட்டி ஒன்று மெதுவாக பூனையை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறது.  மெதுவாக வந்த அந்த நாய்க்குட்டி பூனையின் அருகில் வந்ததும் அதன் மீது தாவிக்குதித்து முத்தம் கொடுத்து பாச மழையில் அந்த பூனையை நனைய செய்கிறது.  ஒரு குழந்தையை தாய் கொஞ்சுவது போன்று கீழே படுத்திருக்கும் அந்த பூனையை நாய்க்குட்டி விடாமல் கொஞ்சுகிறது.


 



கடந்த 24ம் தேதி டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது பல இணையவாசிகளின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது.  இந்த வீடியோவுடன், ஓ..இவன் என்னை திரும்பவும் கண்டுபிடித்துவிட்டான் என்கிற கேப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது, நாயின் இந்த கொஞ்சல் வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ