ஆபத்தில் உதவுவதில் நாய்க்கு நிகர் அதுவே. அதற்காகவே நாய்களை நன்றியுள்ள விலங்கு என அழைப்பார்கள். நாய் கண்முன்னே ஏதேனும் தவறு நடந்தால், அதனால் அதனை தடுக்க முடிந்தால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும். இதற்கு சாட்சியாக தான் இப்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.  அந்த வீடியோவில் ஆற்றின் ஒரு கரையில் மான் குட்டி ஒன்றினை காப்பாற்றிக் கொண்டு நாய் ஒன்று மறு கரை நோக்கி திரும்பி வருகின்றது. தனது வாயில் மான் குட்டியினை கவ்வியவாறு நீரில் நீந்தி வரும் நாயின் செயலுக்கு பலரும் கமெண்ட்சில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ


இதே போன்று சமீபத்தில் குரங்கு ஒன்று தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பயன்படுத்தி பூனை குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சேறும், சகதியுமாக உள்ள குப்பை தொட்டியில் பூனை குட்டி ஒன்று விழுந்து தன்னால் எழ முடியாமல் அதன் உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு உள்ளது. பூனை குட்டியின் சப்தம் கேட்டு குரங்கு ஒன்று குப்பை தொட்டியை எட்டி பார்க்க உள்ளே பூனைக்குட்டி வெளியில் செல்ல வழி இல்லாமல் செய்வதறியாது உள்ளேயே கிடந்துள்ளது. பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் குரங்கு சகதியான குப்பை தொட்டிக்குள் உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது.



எனினும் பூனை குட்டியை காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த குரங்கு குப்பை தொட்டியில் இருந்து வெளியில் வந்து பூனை குட்டியை காப்பாற்ற சிறுமி ஒருவரிடம் உதவி கேட்கின்றது. குரங்கின் மொழியை புரிந்து கொண்ட சிறுமி உடனே குப்பை தொட்டியில் இறங்கி பூனை குட்டியை காப்பாற்றி குரங்கின் கைகளில் ஒப்படைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் மனங்களையும் வென்றது.


மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ