அம்மா போல அன்பை பொழியும் நாய்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ
Emotional Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் மனமும் மெழுகு போல உருகிவிடும். அப்படி ஒரு விடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் புதிய வீடியோக்களைப் பார்க்கிறோம். அவற்றில் ஒரு சில வீடியோக்கள் பயனர்களின் இதயத்தை உலுக்கி விடுகின்றன. இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான வீடியோக்கள் பயனர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. இது போன்ற வீடியோக்களை இணையவாசிகள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள்.
சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மிகவும் அழகாகவும் நெஞ்சை அள்ளும் வண்ணத்திலும் உள்ளது. இது பயனர்களின் இதயங்களை மெழுகு போல உருக வைத்துள்ளது.
மக்கள் பொதுவாக வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை நாம் காண்கிறோம். இவ்வாற்று செல்லப்பிராணிகள் வளர்க்கப்படும் வீடுகளில் இவற்றுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பு உருவாகிறது. வீட்டு உறுப்பினர்கள் செல்லப்பிராணிகளுடன் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். சமீபத்தில் அப்படி ஒரு வீடியோதான் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் நாய் ஒன்று சிறு குழந்தையுடன் விளையாடி அவர் மீது பாச மழை பொழிவதை காண முடிகின்றது.
மேலும் படிக்க | கம்பி வேலியை கடந்த காவிய காதல் - சத்தமில்லாமல் பொழிந்த முத்த மழை: Viral Video
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை எந்த விதமான உடல் தொடுதலையும் விரும்பவில்லை என்பது வீடியோவை பார்த்தால் புரிகிறது. ஆனாலும், அந்த நாய் குழந்தையை தொட்டு தொட்டு அதற்கு ஆறுதல் கூறுவது போல நடந்துகொள்கிறது. தனது பாசத்தை அது பல வகைகளில் வெளிப்படுத்துகிறது.
அம்மாவாய் மாறிய குழந்தையின் வீடியோவை இங்கே காணலாம்:
குழந்தையுடன் விளையாடும் நாய்
வைரலாகி வரும் வீடியோவில், அந்த சிறு குழந்தையுடன் நாய் தொடர்ந்து விளையாட முயற்சிப்பதைக் காண முடிகின்றது. அதே நேரத்தில், நாய் தொட்டவுடன், குழந்தை பின்வாங்குகிறது. நாய் அந்த அப்பாவி குழந்தையை ஒரு தாயைப் போல கவனித்துக்கொள்கிறது. நாய் அந்த குழந்தையை மிகுந்த அன்புடனும் அப்பாவித்தனத்துடனும் அரவணைப்பதைக் காண முடிகின்றது. குழந்தை அந்த நாயிடம் இருந்து விலகி செல்ல முற்படும் போதும், நாய் எழுந்து அருகில் வந்து, குழந்தையை உரசி அன்பை வெளிப்படுத்துவதை வீடியோவில் காணலாம்.
வீடியோ 4 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்து பயனர்களின் இதயம் உருகிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை இதற்கு சுமார் 48 லட்சம் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘இது மிகவும் அழகான ஒரு வீடியோ’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘இந்த வீடியோ கண்களில் கண்ணீரை வரவழைத்தது’ என கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பாட்டு பாடும் பாறை: தட்டினால் ஒலி கேட்கும் அதிசயம்...வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ