ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தல்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் யோகா தினம் சர்வதேச அளவில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன.


சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 40,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி யோகாவின் சிறப்புகள் குறித்து பேசினார். 



இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் வீரர்களுடன் மோப்ப நாய்களும் யோகா செய்து அசத்தின. இது பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்தது. இந்த வீடியோ பதிவை ANI, எய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.