ஜாலியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மட்டும் போதும், இந்த உலகத்தில் உங்களுக்கு முன்னால் மகிழ்ச்சி மட்டுமே தெரியும். சின்ன விஷயங்களைக்கூட பெரிய பிரச்சனையாக எண்ணி மன அழுத்ததுக்கு உள்ளாகுபவர்களுக்கு மத்தியில், எந்தவொரு பிரச்சனைகளையும் தொலைவில் வைத்து பார்க்கும் மனம் படைத்தவர்கள் இந்த பிறவியில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். அவர்கள் மட்டுமே தங்களை எந்த ஒரு வட்டத்துக்குள்ளும் அடைத்துக் கொள்ளாமல் தங்கள் எண்ணம்போல் ஜாலியாக சுதந்திரமாக செயல்படுவார்கள். அப்படியானவர்கள் செய்யும்எ அனைத்து விஷயங்களும் ரசிக்க வைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்


அவர்கள் பெரும்பாலும் பயண விரும்பிகளாகவும், உலகம் சுற்றுபவர்களாகவும் இருப்பார்கள். கிடைக்கும் நேரத்தில் பணத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனே ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள். அவ்வாறு செல்லும்போது தங்களுடன் வர விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அழைத்தும் சென்றுவிடுவார்கள். யாரும் கம்பெனிக்கு கிடைக்கவில்லை என்றால் செல்லப்பிராணியான நாய் குட்டியைக் கூட அழைத்துச் சென்றுவிடுவார்கள்.


மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 


அப்படி ஊர் சுற்ற கிளம்பிய ஒருவர், தான் பாதுகாப்பாக செல்வது மட்டுமல்லாமல் நாய்க்குட்டிக்கும் குட்டி ஹெல்மெட் மற்றும் கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்லும் வீடியோ தான் இப்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது. 



Figen என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் புல்லட் பைக்கில் செல்லும் இளைஞருக்கு பின்னால் குட்டி ஹெல்மெட்டுடன் நாய்க்குட்டி ஒன்றும் இருக்கிறது. இதனை தூரத்தில் இருந்து, அதாவது அவர்களுக்கு பின்னால் சென்றவர்களால் பார்க்க முடியவில்லை. வேகமாக காரில் சென்று பார்க்கும்போது, அந்த நபர் நாய்க்குட்டிக்கு குட்டி ஹெல்மெட் போட்டு கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்கிறார். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதால் இதனை வீடியோவாக பதிவு செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ