வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்தை தொடந்து,  'கொடி' பட இயக்குநர் துரை செந்தில்குமாருடன் கைகோர்த்துள்ளார் தனுஷ்.  இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அசுரன் படம் தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார். 


இந்த நிலையில், சமீபத்தில் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்சமீபத்தில் வெளியானது. இதில், தனுஷ் கையில் ஈட்டி இருப்பது போன்று போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் மகன், தந்தை என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கிறார். அதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் 'நவீன் சந்ரா',  தனுஷுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க உள்ளார், என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்  ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 



நடிகர் நவீன் சந்ரா  "அரவிந்த சமேதா"  படத்தின் மூலம் பிரபலமானவர்.  மேலும் தமிழில் வெளிவந்த பிரம்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.