சிறுத்தையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குட்டி வாத்து ஒன்று இறந்தது போல் நடித்த வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லேட்டஸ்ட் சைட்டிங்ஸின் யூடியூப் சேனலில் பகிரப்பட்ட, வீடியோ பார்ப்பதற்கு நம்பமுடியாததாக உள்ளது. ஆப்பிரிக்காவின் செரோண்டெல்லா கேம் லாட்ஜின் வழிகாட்டியான பென்ஜி சோல்ம்ஸ் இந்த வீடியோவைப் படம் பிடித்தார். அதில் சிறுத்தைப் புலி இருக்கும் இடத்துக்கு தேடி வந்து சிக்கும் அந்த சிறிய வாத்து சமயோசித்தமாக சிந்தித்து இறந்ததுபோல் நடித்து, சிறுத்தை புலியிடம் இருந்து சாதுர்யமாக எஸ்கேப் ஆகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது மணல் பரப்பில் அமைதியாக வேட்டைக்கு காத்திருக்கும் சிறுத்தை புலி முன்பு தைரியமாக சிறிய வாத்து நடந்து செல்கிறது. எதுவுமே கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்த சிறுத்தை புலி இந்த வாத்தை துரத்திப் பிடித்து வேட்டையாடுகிறது. வசமாக சிக்கிக் கொண்டோமே என எண்ணிக் கொண்ட அந்தப் வாத்து உடனடியாக இறந்ததுபோல் நடிக்கிறது. வாயில் கவ்விக் கொண்டிருந்த சிறுத்தைப் புலி, வாத்து குஞ்சு உயிரோடு இருக்கிறதா என செக் செய்கிறது. அது உயிரோடு இல்லை என நினைத்துக் கொண்டு அது அசால்டாக இருக்கும் சமயத்தில் துள்ளிக் குதித்து ஓடிவிடுகிறது அந்த வாத்து. 


மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ


சிறுத்தை வேட்டையாடியவுடன் வாத்து  உடனடியாக அசைவதை எப்படி நிறுத்துகிறது என்பதை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். வாயில் கவ்வினாலும், சிறிய வாத்து அசையாமல் உள்ளது, அது இறந்துவிட்டதாகத் தெரிகிறது. நீங்கள் கூட அதனிடம் அசைவு இல்லாததை பார்க்கும்போது அப்படி எண்ணுவீர்கள். இருப்பினும், சிறிது நேரத்தில் சிறுத்தை அதை கீழே போட்டவுடன், வாத்து வேகமாக எழுந்து ஓடுகிறது. இந்த சம்பவத்தை விளக்கிய சோல்ம்ஸ், “எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சிறுத்தை மரத்தில் இருந்து, மற்ற வாத்து குஞ்சுகளை உன்னிப்பாகக் கவனித்தது. அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன் உடன்பிறப்புகள் மறைந்திருந்த அடர்ந்த புதர்களை நோக்கி ஓடியது. சிறுத்தையால் அந்த சிறிய வாத்தை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.



மூன்று நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோ 3.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை சேகரித்துள்ளது. கூடுதலாக, இது 4,300 லைக்குகளைக் குவித்துள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். “வாட் எ லெஜெண்ட். அவர் உங்களைக் கடிக்கும்போது கூட இறந்து விளையாடுவது - அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு தைரியம் தேவை,” என்று ஒரு YouTube பயனர் பாராட்டினார். “அந்தக் குட்டி பறவை மிகவும் அழகாகவும் அபிமானமாகவும் இருக்கிறது. இறுதியில் சிறுத்தையிடம் இருந்து தப்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று மற்றொருவர் எழுதினார். 


மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ