அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்கத் துவங்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், அத்தியாவசியமற்ற பொருட்களின் விநியோகம் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நகரங்களில் விநியோகம் தற்போதைக்கு நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது.


நாட்டின் மெட்ரோ நகரங்களாகன டெல்லி, மும்பை, பெங்களூரு உள்பட அகமதாபாத், புனே போன்ற பல்வேறு நகரங்கள் சிவப்பு மண்டலங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக வெள்ளி அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டில் மூன்றாம் கட்ட முழு அடைப்பை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டது. 


இந்த பதிவினை இடுகையில், ஒரு பச்சை மண்டலத்திற்கு (புதுச்சேரி) ஸ்மார்போன் வழங்குவதற்காக அமேசானை சோதித்தோம். ஆர்டரின் டெலிவிரிக்கு வழக்கத்தை விட அதிக நேரம் ஆகக்கூடும் என்று ஒரு மறுப்பு செய்தி வந்தாலும், ஆர்டனை பசுமை மண்டத்திற்கு வழங்க இயலும் என போர்ட்டல் தெரிவிக்கிறது.



அமேசாம் மறுப்பு செய்தியை பொறுத்தவரையில்., "COVID-19 தொற்றுநோய் என்பது நம் அனைவருக்கும் முன்னோடியில்லாத சூழ்நிலை. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீதான நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அமேசான் இந்த காலகட்டத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், எங்கள் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதும் மிக முக்கியமானது.


நடைமுறையில் உள்ள விரிவான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, சில தபால் குறியீடுகளுக்கான விநியோகங்களை தடைசெய்துள்ளோம் அல்லது தாமதப்படுத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பீடு செய்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.


மறுபுறம் பிளிப்கார்ட் மண்டலங்களைப் பொருட்படுத்தாமல், விநியோகத்திற்கான எந்தவொரு பொருளையும் காட்டவில்லை., எல்லா பொருட்களும் ‘வழங்க முடியாதவை’ என்ற மறுப்புடன் போர்ட்டல் செய்தியளிக்கிறது. எனினும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்கு போர்ட்டல் பச்சை கொடி காட்டியுள்ளது.