புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்  ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டனர். 


புகழ்பெற்ற டெல்லி ஜூம்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிப்பில்; "நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.