’வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை அப்படியேதான் இருக்கு’ என்பது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்து சொன்ன டயலாக் மிகவும் பிரபலமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வசனத்தை உறுதி செய்கிறார் இந்த வயதான முல்லா. ஆனால், அவர் சூப்பர்ஸ்டார் இல்லை என்பதால், ஸ்டைல் காட்டும்போது குப்புற விழுந்துவிட்டார். ஆனால் தாடியில் கண்டிப்பாக மண் ஒட்டியிருக்கும். ஊஞ்சாலாடும் முல்லாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 


இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்குள்ளது. நெட்டிசன்களின் விருப்பத் தேர்வாக மாறிவிட்டது இந்த ஸ்டைலான ஊஞ்சலாடும் முல்லா வீடியோ.


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)


இணைய உலகில் (Social Media) அன்றாடம் பல காணொளிகள் பார்க்கப்படுவதும் பகிரப்படுவதும் வழக்கம்.  தவறு செய்து கீழே விழுந்து எழும் முல்லாவைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்கமுடியாது. 


வைரலாகி இந்த வீடியோவில் மரத்தில் கட்டிலை கட்டி வைத்து,அதில் ஒருவர் அமர்ந்து அதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பதை காணலாம். இன்னும் விரைவாக ஆட்டு என்று சொல்லும் ஒரு ஆணின் குரலும் பின்னணியில் ஒலிக்கிறது. 


அந்த வார்த்தைகள் தரும் உற்சாகத்தில் மேலும் மேலும் வேகமாக ஆடும் முல்லா, ஒரு கட்டத்தில் ஒரு கையை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டார். அப்புறம் என்ன? பேலன்ஸ் தவறி தொபீர் என்று கீழே விழுந்த அந்த முதியவர், உடனே துள்ளி குதித்து எழுகிறார். ஆனால் அதைப் பார்த்தால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.


இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் இது சமூக ஊடக தளமான Instagram இல் bhutni_ke_memes என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பார்வைகள் மட்டுமல்ல, கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.


ALSO READ | சைக்கிள் ஓட்டி இணையத்தை கலக்கும் பச்சைக்கிளி: வைரலான வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR