வனப்பகுதியையொட்டி அல்லது வனப்பகுதிக்குள் செல்லும் சாலையில் வன விலங்குகள் எப்போது வேண்டுமானால் உலாவும், சாலைகளை கடக்கும். பொதுமக்களாகிய நாம், அந்த வழியில் பயணிக்க நேர்ந்தால் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். வன விலங்குகளுக்கு எந்த வகையிலும் ஆபத்து நேராத அளவுக்கு வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். வனப்பகுதிகளுக்குள் செல்லும் போது அதிவேகமாக ஒலி எழுப்பக்கூடாது. விலங்குகள் சாலையை கடக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். இவையெல்லாம் அடிப்படை விதிமுறைகள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | துரத்திய புலியை விரட்டிய பசு: நம்ப முடியாத வைரல் வீடியோ


ஆனால் இவையெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதா? என்றால் மிகப்பெரிய கேள்வி. சிலர் வேண்டுமென்றே வனப்பகுதிக்குள் வேகமாக செல்வதையெல்லாம் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில், வாகனத்தில் செல்லும் பெண்களை, திடீரென குறுக்கே வந்த யானை ஒன்று பயப்படுத்திவிட்டு ஓடும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வனப்பகுதிக்குள் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வண்டியில் செல்கின்றனர். வழியில் எதுவும் இல்லை என்பதால் நார்மலான வேகத்தில் பயணிக்கின்றனர். ஆனால், சிறிது தூரத்தில் திடீரென காட்டுக்குள் இருந்து சாலையில் ஏறிய யானை, அந்த பெண்கள் ஓட்டிய வாகனத்தின் குறுக்கே சென்றுவிடுகிறது.



இதனைப் பார்த்ததும் அந்த பெண்கள் பதைபதைத்துவிடுகின்றனர். எப்படியோ ஒரு வழியாக யானை மீது வாகனத்தை மோதாமல் கடந்து சென்றுவிடுகின்றனர். யானையும் பயந்தவாறு காட்டுக்குள் ஓடிவிடுகிறது. காண்போர் அனைவரும் இந்த பதைபதைப்பை உணர முடியும். நல் வாய்ப்பாக அந்த பெண்கள் யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்துவிட்டார்கள் என்றே கூறலாம்.


மேலும் படிக்க | சிறுத்தைக்கு முத்தம் கொடுத்து அரவணைத்த பெண்: மயக்கத்தில் சிறுத்தை, ஷாக்கில் நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ