MS Excel ரேட்டிங்கை குறைத்தது Surf Excel; வைரலாகும் Video!
பெயர் குழப்பத்தால் Google Play Store-ல் தனது ரேட்டிங்கை பெருமளவில் இழந்தது Microsoft Excel செயலி!
பெயர் குழப்பத்தால் Google Play Store-ல் தனது ரேட்டிங்கை பெருமளவில் இழந்தது Microsoft Excel செயலி!
பிரபல துணி துவைக்கும் பவுடர் பிராண்டான SurfExcel சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. வட மாநிலத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையினை மையப்படுத்தி வந்த இந்த விளம்பரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் ட்விட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில் Google Play Store-ல் SurfExcel ஆப்-க்குப் பதிலாக Microsoft Excel ஆப்பிற்கு டவுன்ரேட் ரேட்டிங் வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் நாள் இந்த விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தில் ஒரு குறுகிய தெருவுக்குள் கூடியிருக்கும் சிறுவர்கள் ஹோலி பண்டிகையினை கொண்டாடுகின்றனர். மாடியில் நின்றுகொண்டு வருவோர் செல்வோர் மீது வண்ணங்களை வீசி எறிந்து விளையாடுகின்றனர்.
அப்போது வெள்ளை உடை அணிந்து சைக்கிள் ஒன்றில் பயணிக்கும் சிறுமி தன்னை குறிவைத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களை வண்ணங்களால் தாக்க கேட்கின்றார். சிறுவர், சிறுமிகளும் நீர் பந்துகளை வீசுகிறனர்.
வழக்கத்துக்கு மாறாக அதிலிருந்து தப்பிக்காமல் எல்லா குழந்தைகளும் தங்களிடமிருக்கும் வண்ண நீர் பந்துகளை வீசி தீர்க்கும் வரை அந்தச் சிறுமி காத்திருக்கிறார். பிறகு அந்த வண்ணங்கள் தீர்ந்த பிறகு, அருகில் உள்ள வீட்டிலிருக்கும் வெள்ளை உடை அணிந்த இஸ்லாமிய சிறுவனை அழைக்கிறார். அவரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மசூதியில் விடுகிறார்.
கறை நல்லது என்ற அவர்களின் வாசகத்தோடு விளம்பரம் முடிகிறது.
இந்த விளம்பரத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தன. சிலர் இந்த விளம்பரத்தை மத ஒற்றுமைக்கான அடையாளம் என வரவேற்றனர். சிலர், இந்து மதப் பண்டிகையைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து ட்விட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக் ட்ரண்டானது. இந்நிலையில், Google Play Store-ல் SurfExcel ஆப்-க்குப் பதிலாக Microsoft Excel ஆப்பிற்கு டவுன்ரேட் ரேட்டிங் வெகுவாகக் குறைந்துள்ளது. டவுன் ரேட் செய்ததோடு அல்லாது கீழே பின்னூட்டங்களிலும் தங்கள் கருத்துகளைக் கொந்தளித்துப் பகிர்ந்திருந்தனர்.