அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருக்கடியினை விமர்சிக்கும் வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை அட்டை படம் வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பை தனது அட்டைப் படம் மூலம் டைம்ஸ் பத்திரிக்கை விமர்சித்துள்ளது.


கடந்த 2016 நவம்பர் மாதம் நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் இரு நடிகைகளும் பொது அரங்கில் பேசாமல் இருக்க ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் இரு நடிகைகளுக்கும் பெரும் தொகை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.


இச்சம்பவம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டை வழக்கறிஞர் கோஹன் ஒப்புக்கொண்டார். மேலும் ட்ரம்ப் அறிவுறுத்தலின்படியே தான் நடிகைகளுக்குப் பணம் கொடுத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.



இந்நிலையில் கோஹனின் இந்த வாக்குமூலம் அதிபர் ட்ரம்ப்புக்கு அரசியல்ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டடுள்ள நிலையில், அதிபர் ட்ரம்பின் நெருக்கடி நிலையினை சித்தரிக்கும் வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை தனது அட்டை படத்தினை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் அதிபர் ட்ரம்ப் தண்ணீரில் தத்தளிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது!