மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வரவேண்டும் என இயக்குநர் சுசிந்திரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக ‘நாற்பது ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்களால் ஒருவரால் மட்டுமே முடியும்’ என நடிகர் அஜித் குமாருக்கு இயக்குநர் சுசிந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.


தமிழகத்தைப் பொறுத்தவரை, நடிகர் கமல்ஹாசன் புதிதாக கட்சித் தொடங்கி தனியாக தேர்தலைச் சந்திக்கவுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவரைப்போல் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்கலாம் என செய்திகள் பரவி வருகின்றன. இதற்கிடையில், அஜித் குமார் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார். அதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட அஜித்குமார், ‘எனக்கும் அரசியலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என்று பதிலளித்திருந்தார்.


இந்தநிலையில், இயக்குநர் சுசீந்திரன், அஜித்குமார் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடிதம் எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 



அவரது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... ‘40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


அவருடைய ட்விட்டுக்கு பதில் அளித்துள்ள அஜித் ரசிகர்கள், ‘எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம்’ என்று பதில் பதிவு இட்டுள்ளனர்.