காளை மாட்டுடன் சண்டையிடும் குட்டி வாத்து; வைரலாகும் வீடியோ...
இணையத்தில் நான் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வைரல் வீடியோக்களை கடந்து செல்கிறோம். இந்த வீடியோக்களில் சில நமக்கு உத்வேகத்தை அளிக்கும், சில வீடியோக்கள் ஆச்சரியத்தை அளிக்கும்.
இணையத்தில் நான் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வைரல் வீடியோக்களை கடந்து செல்கிறோம். இந்த வீடியோக்களில் சில நமக்கு உத்வேகத்தை அளிக்கும், சில வீடியோக்கள் ஆச்சரியத்தை அளிக்கும்.
READ | உயிருக்கு போராடும் தனது குட்டியை காப்பாற்ற பரிதவிக்கும் தாய் குரங்கு!...
அந்த வகையில் இன்று நாம் நம்மை வியக்க வைக்கும் வீடியோ ஒன்றை பார்க்க இருக்கிறோம். இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில் பலம் நிறைந்த காளை கூட்டத்துடன் ஒரு குட்டி வாத்து ஒன்று மல்லு கட்டுகிறது.
வீடியோவின் மிகவும் வேடிக்கையான பகுதி என்னவென்றால், ஒரு வாத்து இந்த மாடுகளை பயமுறுத்துகிறது. அது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் அது தான் உண்மை.
இந்த வீடியோவை பார்க்கையில் நமக்குள் ஓர் உத்வேகம் பிறக்கிறது. நம் பலத்தை நிரூபிக்க அளவு ஒரு பொருட்டு அல்ல, மன தைரியம் பலமாக இருந்தால் எவரையும் எதிர்த்து நிற்கலாம் என்ற நம்பிக்கையை வலியுறுத்துகிறது.
READ | மினி பைக்கில் வலம் வந்த குரங்கு குழந்தையை பறித்து சென்றதால் பரபரப்பு!...
சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் திபான்சு கபார் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த வீடியோ 3.7k மறு பதிவிடல் மற்றும் 17.4k லைக்ஸ்களை பெற்றுள்ளது.
இணையத்தில் பலராலும் விரும்பப்பட்ட வீடியோ உங்கள் பார்வைக்காக நாம் கீழே இணைத்துள்ளோம்.