சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் உள்ளது. மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசிக்கின்றனர். ஆனால், இவற்றில் சில திகிலை கொடுப்பதாகவும் அமைந்து விடுகிறது. அதிலும், பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொன்னாலும்,  பாம்புகளின் வீடியோக்கள் அதிகம் வைரலாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகளின் வீடியோக்கள் பலரையும் கவர்வதற்கான காரணம் என்ன என்பது நிச்சயம் புதிர் தான். ஒருவேளை நம்மை பயப்படுத்தும் பாம்பை நேரில் காணமுடியாவிட்டாலும், வீடியோவில் பாதுகாப்பாக பார்க்கலாம் என்ற எண்ணமோ என்னவோ. பாம்பு தாக்கும் காட்சியை இணையம் மூலம் வைரலாகும் வீடியோக்கள் சுவராசியமாக்குகின்றன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. முதலையும், மலைப்பாம்பும் வலிமையான விலங்குகள். ஆனாலும், இருவேறு குணாதிசயங்கள் கொண்டவை. முதலை மற்றும் மலைப்பாம்பு இரண்டும் மோதிக் கொண்டால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை காட்டும் அதிர்ச்சி கலந்த வீடியோ இது.  


வைரல் வீடியோவில்  அளவில் பெரிய பாம்பும், நீண்ட முதலையும் சண்டை போட்டுக் கொள்கின்றன. வலிமையான இரண்டுமே, பரஸ்பரம் கொல்வது என போட்டிப் போட்டுக் கொண்டு போடும் சண்டை அச்சத்தைக் கொடுத்தாலும், த்ரில்லர் படம் போல தோன்றுகிறது.  


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்



சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில  வீடியோக்கள் நம் மனதை மிகவும் கனமாக்கிவிடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை, பலதரப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன.  குறிப்பிட்டசில வீடியோக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து வைரல் வீடியோக்களில் முதலிடத்தை பிடிக்கின்றன.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)