மும்பை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இரண்டாவது முறையாக' மே 3 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்களை தங்கள் வீடுகளுக்குள் இருக்க நிர்பந்தித்தாலும், “Flamingo” என்னும் பிங்க் நிறப்பறவை தன் பாதையை நோக்கி சரியான இடத்திற்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அதிலும் அதன் தலைநகரமான மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையில்ம மும்பை பெருநகரப் பகுதியில், குறிப்பாக நவி மும்பை, யுரான், தானே க்ரீக், பஞ்சு தீவு மற்றும் வசாய் ஆகிய இடங்களில் ஏராளமான ஃபிளமிங்கோக் (Flamingo) பறவைகளை  வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதாவது ஈரான் நாட்டில் மிகுதியாக காணப்படும் ஃபிளமிங்கோ (Flamingo) என்னும் பிங்க் நிறப்பறவை ஆண்டுதோறும் மும்பைப்பகுதிலுள்ள சதுப்புநிலப்பகுதிக்கு பறந்து வரும். எப்போதும் அதிகபட்சம் 5000 பறவைகள் வரை கூடும், இந்த பகுதிகளி, இந்த முறை 10000-க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதால், அந்த பகுதி பிங்க் நகரத்தை போல் காட்சியளிக்கின்றது.


மும்பை மிரர் அறிக்கையின்படி, தானேவில் ஒரு வனவிலங்கு வார்டன், "சுற்றியுள்ள மனிதர்கள் யாரும் இல்லாததால், இயற்கையாகவே சமூகமாகவும், பெரிய குழுக்களில் தங்கியிருக்கும் ஃபிளமிங்கோக்கள், தொந்தரவில்லாத தங்குமிடத்தை அனுபவித்து வருகின்றன" என்று கூறினார்.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஃபிளமிங்கோக்களின் நடத்தைகளைப் படிக்க இது சரியான நேரமாக இருக்கக்கூடும் என்றும், இது உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான கூடுதல் வழிகளை வகுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.


சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிலும் ஃபிளமிங்கோக்கள் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (பிஎன்ஹெச்எஸ்) மதிப்பிட்டுள்ளதாவது, கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமான பறவைகள் உள்ளன.


ஃபிளமிங்கோக்களின் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. மக்கள் அதைப் பார்த்து தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தினர்.