தமிழர்களின் தொப்புள்கொடி தாயத்து முறை, ஐக்கிய நாடுகளில் ஒன்றான ப்ளோரிடாவில் பிரபலமாகி வருகின்றது!
 
நம் பெற்றொர், அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் இடுப்பில் அல்லது கழுத்தில் சிறிய தாயத்து இருப்பதினை நாம் பார்த்திருப்போம். இந்த தாயத்தில் அப்படி என்ன இருக்கின்றது?... அதன் பயன் தான் என்ன?...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலமாக Stem-cell therapy குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். குழந்தையின் தொப்புள்கொடியினை பாதுகாத்து வைத்து, அதில் இருக்கும் செல்லினை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் இருந்த பாதுகாப்பு அளிக்கவே இந்த Stem-cell therapy பயன்படுகிறது. ஆனால் மருத்துவதுறையில் இதற்காக கோரப்படும் ஊதியம் பல லட்சங்கள்.


ஆனால் இந்த வித்தையினை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செலவில்லாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் நம் முன்னோர்கள். அப்போதைய காலகட்டத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு செம்பு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.


பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் அவரை தாக்கும் பட்சத்தில், கட்டப்பட்ட தாயதிதல் இருக்கும் தொப்புள்கொடியினை பயன்படுத்தி அவரது நோயினை போக்குவர். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. நாகரீகம் என்ற பெயரில் பல வீடுகளில் கைவிடப்பட்டது.



இந்தியாவில் இந்த பழக்கம் கைவிடப்பட்டால் என்ன, மேலைநாட்டில் பின்பற்றுவோம் என ப்ளோரிடாவை சேர்ந்த பிரபல அழகுகலை நிர்வனம் முன்வந்துள்ளது. ரூத் ஆவுரா என்னம் பெண்மணி தானது முதல் தாய்மையின் போது இந்த வழக்கத்தினை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார். பின்னர் இந்த வழக்கத்தினை பிறரும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தொப்புள்கொடி வழக்கத்தினை நவநாகரீக கலாச்சாரத்துடன் கொண்டுச்சென்றுள்ளார்.



வைர கல் பதித்த சங்கிளி போல்ல, தொப்புள்கொடி சங்கிளிகளை இவர் அறிமுகம் செய்ய, இந்த சங்கிளிக்கு மார்கெட்டில் தேவை அதிகரித்துள்ளது. ப்ளோரிடாவில் இருக்கும் பெரும்பான்மையான தாய்மார்கள் தற்போது இந்த சங்கிளியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.