சிறுமியின் மார்பக வளர்ச்சியை கிண்டல் செய்த பள்ளி நிர்வாகம்!
சிறுமி ஒருவரின் மார்பக வளர்ச்சியை காரணம் காட்டி அவரது பள்ளி நிர்வாகம் அவரை அவமானப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சிறுமி ஒருவரின் மார்பக வளர்ச்சியை காரணம் காட்டி அவரது பள்ளி நிர்வாகம் அவரை அவமானப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ப்ளோரிடாவை சேர்ந்த 17 வயது சிறுமி Lizzy Martinez, கடந்த ஏப்ரல் 2-ஆம் நாள் இவர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாக இயக்குனரிடம் இருந்து, அவரது அறைக்கு வருமாறு Lizzy Martinez-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் அறைக்கு சென்ற அவரிடம்... Lizzy Martinez-ன் மார்பக வளர்ச்சியானது மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாக இருப்பதாகவும், அவரது மார்பக வளர்ச்சியினை மறைக்கும் அளவிற்கு மாற்று ஆடைகளை பள்ளிக்கு அணிந்து வரும்படியும் பணிக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் இருந்து மற்றொரு நிர்வாக உறுப்பினர், Lizzy Martinez-க்கு பேண்டேஜ்களை கொடுத்து இதன்மூலம் தனது மார்பக்ககினை மறைத்துக் கொள்ளுமாறும் (Put BAND-AIDS on her nipples) கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த Lizzy Martinez அன்றைய தினம் விரைவாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். வழியில் தனது தாயார், Kari Knop இடம் நடந்த விவகாரங்களை குறித்து தெரிவித்துள்ளார்.
தான் அணியும் ஆடைக்கு உள், அடர்த்தி மிகுந்த சட்டையினை அணிந்து அதன் மேல் மற்ற ஆடைகளை அணியுமாறு,. தனது ஆசிரியர் தன்னிடம் தெரவித்தார் என்று Lizzy Martinez தெரிவிக்கையில் அவரது தாயார் அதிர்ந்துள்ளார்.
உடனடியாக பள்ளி நிர்வாகத்தினை தொடர்புகொண்டு தனது கண்டனத்தினை பதிவுசெய்துள்ளார் Kari Knop. "ஒரு பெண்னின் உடல் ரீதியான வளர்ச்சிக்கு அந்த பெண்னை அனைவரது முன்பும் அவமானப்படுத்துவது நியாயம் அற்ற ஒன்று" என குறிப்பிட்டுள்ளார். எனினும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித வருத்தமும் தெரவிக்கப் படவில்லை. மாறாக இந்த விஷயத்தினை பள்ளி நிர்வாகம் வேறு விதமாக அனுகியிருக்கலாம் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினை சொல்லி குற்றமில்லை, இந்த சூழலுக்கு தான் இருக்கும் சமூதாயம் தான் காரணம் என கருத்தில் கொண்டு தன் மகளினை தைரியப்படுத்தியுள்ளார் Kari Knop.