இயற்பியல் துறை மேதைக்கு, இன்றைய கூகிள் டூடுல்!
ப்ரெஸ்லூ பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்த இவர் கோட்டினென் பல்கலைக்கழகத்தில் தனது Ph.D பட்டத்தினைப் பெற்றார்!
இயற்பியல் துறை மேதை மேக்ஸ் பார்ன் அவர்களின் 135-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று சிறப்பு டூடுல்-னை வெளியிட்டுள்ளது கூகிள்.
இன்றைய குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையின் வளர்ச்சி, மேக்ஸ் பார்ன் இல்லாமல் நடந்திருக்குமா என்பது கேள்விகுறி தான்!
குவாண்டம் மெக்கானிக்ஸ் இல்லாமல், மருத்துவத்தில் முன்னேற்றம் (மருத்துவ இமேஜிங் சாதனங்கள் அல்லது MRI கள் போன்ற கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை), லேசர்கள் மற்றும் தனிப்பட்ட கணிப்பீடு ஒரு கனவாகவே இருந்திருக்கும்.
குவாண்டம் துறையில் மேக்ஸ் பார்ன்-ன் பங்களிப்பிற்காக இவருக்கு 1954-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு வழங்கப்பட்டபோது.
டிசம்பர் 11, 1882-ல் ப்ரெஸ்லூ-வில் மேக்ஸ் பிறந்தார். அப்போது ஜெர்மன் பேரரசின் ஒரு பகுதியாக இந்நகரம் இருந்தது, ஆனால் இப்போது போலந்தில் ஒரு பகுதியாக உள்ளது.
ப்ரெஸ்லூ பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்த இவர் கோட்டினென் பல்கலைக்கழகத்தில் தனது Ph.D பட்டத்தினைப் பெற்றார், பின்னர் அதே பல்கலைகழகத்தில் அவர் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியராகவும் ஆனார்.
துரதிருஷ்டவசமாக, ஜேர்மனியில் நாஜிக்களின் எழுச்சியுற்றதால் இவர் ஜேர்மனியில் இருந்து 1933-ல் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். பிரிட்டனில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்கை தத்துவத்தின் டேட் பேராசிரியராக ஆனார் மற்றும் 1954-ல் ஓய்வு பெற்றவரை இயற்பியலுக்காக தனது வாழ்வினை அற்பனித்தார்.
தனது வாழ்நாள் முழுவதும், மேக்ஸ் பார்ன் உலகம் முழுவதும் பல புகழ்பெற்ற கல்வியாளர்களை சந்தித்தார், இச்சந்திப்பு அவரது குவாண்டம் இயக்கவியல் ஆராய்ச்சி வடிவமைக்க உதவியது.
இத்தகைய மாமேதையின் பிறப்பினை கொண்டாடும் வகையில் இன்றைய கூகிள் டூடுல் காட்சியளிக்கிறது!