“டேய் மச்சான்..வாடா விளையாடலாம்” உறங்கிய நாயை எழுப்பிய குரங்கு! வைரல் வீடியோ..
Funny Viral Video Of Monkey : இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியாேவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
Funny Viral Video Of Monkey : கடந்த சில ஆண்டுகளாக டிவியை பார்த்து பொழுதை போக்குகிறோமோ இல்லையோ, கையில், அடக்கமாக இருக்கும் செல்போனை பார்த்து நன்றாகவே பொழுதை போக்குகிறோம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் எக்ஸ் என எக்கச்சக்க தளங்கள் வந்து விட்டன. இதனால் தகவலகள் பரிமாறிக்கொள்ளப்படுதவை விட, வீடியோக்கள் அதிகமாகவே பகிரப்படும். அப்படி, தற்போது பலரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு குறிப்பிட்ட வீடியோ குறித்து இங்கு பார்ப்போம்.
வைரலாகும் வீடியோ:
மிருகங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் காட்டு விலங்குகளில் மிகவும் க்யூட்டான விலங்காக விளங்குவது குரங்கு. இது செய்யும் சேட்டைகள் பல சமயங்களில் சிரிப்பாகவும், சில சமயங்களில் கடுப்பாகவும் இருக்கும். அந்த வகையில், அது தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு நாயை வம்புக்கு இழுக்கும் வீடியோதான், தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், மாலை வெயிலில் சன் பாத் எடுத்துக்கொண்டு இரண்டு நாய்கள் நிழலில் படுத்துக்கொண்டிருக்கின்றன. அதில், ஒரு நாயை போய் வம்பிழுக்கும் அந்த குரங்கு, வா விளையாடலாம் என்பது போல அந்த நாயை இழுக்கிறது. எவ்வளவு இழுத்தும் அந்த நாய் வரவே இல்லை. இதையடுத்து ஓய்ந்து போன அந்த குரங்கு அதன் மேலேயே படுத்துக்கொண்டது. இந்த குரங்கு செய்யும் சேட்டைக்கு பின்னால் வாய்ஸ் ஓவர் வேறு கொடுத்து வைத்திருக்கின்றனர். இதை பார்த்த பலர், “என்னா சேட்ட பன்னுது பார் தம்மாத்தூண்டு கொரங்கு..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால் பரபரப்பு!
மேலும் படிக்க | டான்ஸ் ஆடப்போய் போன தண்ணீல போட்டுட்டானே! நகைப்பூட்டும் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ