யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. அதிலும், குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் குளித்தாலும், தூங்கினாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. இதற்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் உண்டு. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு ரசிக்கத் தகுந்தவையாக இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில், பசியுடன் இருக்கும் குட்டி யானை ஒன்று, பால் தர தாமதப்படுத்தும் பாதுகாவலரை அவசரப்படுத்தும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



 


இந்த வைரலான வீடியோவை இன்ஸ்டாகிராமில் டோரி ஹோகார்ட் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள குறும்படத்தில், ஒரு குட்டி யானை தனது உணவுக்காக ஆவலுடன் காத்திருப்பதைக் காணலாம். பராமரிப்பாளர் குழந்தையின் பால குடிக்கும் பாட்டிலில் பால் ஊற்றியபோது அது பொறுமையின்றி காத்திருந்தது. தனது காலின் மீது காலை வைத்து குனிந்து பிளறுகிறது. அந்த நபர் பாட்டிலில் ஒரு வெள்ளை நிறப் பொருளைப் போட்டு, சரியாகக் கலக்கும்படி குலுக்கி பின் பாலை தருகிறார். வைரலாகி வரும் இந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருக்கும் சிலர் குட்டி யானையையும் அதன் செய்கையையும் பார்த்து ரசித்து சிரிப்பதைக் காணலாம். சில வினாடிகளுக்குப் பிறகு, பாதுகாவலர் யானைக்கு பால் கொடுத்த பின் அது மகிழ்ச்சியுடன் குடித்தது.


மேலும் படிக்க | நாட்டு சரக்கை குடித்து விட்டு மட்டையான யானைகள்... படாத பாடுபட்டு எழுப்பிய வனத்துறையினர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ