"கேம் ஆஃப் த்ரோன்ஸ்" நட்சத்திரம் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததை வெளிப்படுத்தியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 7,453-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்த வைரசால் சுமார் 186,126 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 129 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர். 


இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. முதலில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தானும் தன் மனைவி ரீட்டா வில்ஸனும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹாங்க்ஸ். அங்குதான் அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்று ஹாலிவுட் நடிகர்கள், கரோனாவால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


இதை தொடர்ந்து, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் எனது குடும்பமும் (பிறருக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதற்காக) சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸை விரட்டியடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். 



தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இட்ரிஸ் எல்பாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். எனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் வந்திருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.