வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நடன வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. பலருக்கு இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் கூட கிடைத்துள்ளது. திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனத்தை நாம் இந்த வீடியோக்களில் பார்த்துள்ளோம். அதுவும் குழந்தைகளின் நடன வீடியோக்கள் உடனடியாக வைரல் ஆகின்றன. சமூக உடகங்களின் மூலம் குழந்தைகள் தங்கள் பல வித திறமைகளை உலகுக்கு காட்டுகிறார்கள். இந்த சிறுவன் சிறுமியர்களின் கலைத் திறமைகளும் பிற திறமைகளும் பல சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். 


சமீபத்தில் அற்புதமாக நடனமாடும் ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியொவில் சிறுமி ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் வெகுவாக அவரை புகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான இந்தி படமான "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" திரைப்படத்தின் "வாட் ஜும்கா" பாடலுக்கு இந்த சிறுமி மிக அசத்தலாக நடனமாடுகிறார். 


இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பாடல் இப்போது டிரெண்டாகி வருகின்றது. இந்த ட்ரெண்ட் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


மேலும் படிக்க | கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ


வாட் ஜும்கா கிரா பாடலுக்கு ஆடி அசத்திய சிறுமி


ஆலியா பட்டின் கவர்ச்சியான "வாட் ஜும்கா" ட்யூனுக்கு பல பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் நடனமாடி அதை சமூக ஊடக தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த பெண்ணும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். சிறுமி பாடலின் நடன அமைப்பை துல்லியமாகவும் வசீகரமாகவும் பின்பற்றி தனது நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய ஆற்புதமான நடனமும் மாஸ் ரியாக்ஷணும் பார்க்க மிக அழகாக உள்ளது. மேலும் நடனமாடும் போது அவருக்கு உள்ள மகிழ்ச்சியான மனநிலையையும் காண முடிகின்றது. 


சிறுமியின் மாஸ் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் aadhyayasree__did என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும், ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.  பலர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான பயனர்கள் இந்த வீடியோவில் உள்ள சிறுமியின் நடனத்தையும் பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க | என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ