ஏம்மா.. பிட் வைக்க இந்த இடம்தானா கிடைச்சுது: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
Funny Viral Video: பிட் அடிச்சிருக்கீங்களா? அடிச்சிருந்தாலும், இப்படி நீங்க பிட் அடிச்சி இருக்க மாட்டீங்க. பிட் அடித்து மாட்டிக்கொள்ளும் பெண்ணின் வேடிக்கை வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இளைய சமூகத்தினர் தேர்வுகளுக்கு சரியாக படிக்காமல், அவ்வப்போது தேர்வு நேரத்தில் தோல்வியடையாமல் பாஸ் ஆக, தேவையான மதிப்பெண்களை பெற, பிட் அடிப்பதை பல வீடியோக்களில் நாம் தினமும் காண்கிறோம். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சில மாணவர்கள் தேர்வு மையத்தில் பிட் அடித்து மதிப்பெண் பெறுவதில் வெற்றியும் அடைகிறார்கள்.
எனினும், சில மாணவர்கள் சில புத்திசாலி ஆசிரியர்களின் கண்களில் இருந்து தப்ப முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோ மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதில் ஒரு பெண் பிட் அடிக்க தெர்ந்தெடுத்துள்ள இடத்தை யாரும் யோசித்துக்கூட பார்க்க முடியாது. அப்படி ஒரு இடத்தில் அவர் பிட்டை மறைத்து வைத்துள்ளார்.
ஆனால் புத்திசாலி பெண்ணுடைய ஆசிரியையும் அதிக புத்திசாலியாக இருந்ததால், அவர் பிட் அடித்து மாட்டிக்கொள்கிறார்.
மேலும் படிக்க | கடனை திருப்பி செலுத்தாததால், ரோட்டில் இப்படி ஒரு தண்டனையா? வீடியோ வைரல்
பிட் அடிக்க இப்படி ஒரு ஐடியாவா?
தேர்வு நேரம் தொடங்கியவுடன், பெண் ஒரு கால் மேல் மற்றொரு காலை போட்டு அமர்ந்தார். ஆனால், அதன் பிறகு வீடியோவில் காணப்பட்ட காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த அறிவாளி பெண், ஒரு தனி காகிதத்தில் குறிப்புகளை எழுதி எடுத்து வருவதற்கு பதிலாக, தன்னுடைய கால்களிலேயே பிட் எழுதி எடுத்து வந்துள்ளார். அவர் காலில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை பார்த்து எழுதிக்கொண்டிருந்த போது, தூரத்தில் அமர்ந்திருந்த ஆசிரியை அவரை கவனித்து விட்டார். அவர் தனது கேமராவை ஆன் செய்து அந்த பெண் செய்யும் வேலைகளை அப்படியே ரெகார்ட் செய்தார்.
ஆசிரியை தனக்கு அருகில் இருப்பதை பார்த்த பெண் மிகவும் பயந்துவிடுகிறார். உடனடியாக அவர் வேர்த்து விருவிருவித்து எழுந்து நிற்பதை வீடியோவின் முடிவில் காண முடிகின்றது.
பிட் அடித்து மாட்டிக்கொண்ட பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் funtaap என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இது மிகவும் வேடிக்கையாக இருப்பதுடன் சிரிப்பை அடக்க முடியாமல் நம்மை நம் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச்செல்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க | ‘ஷ்ஷ்... பாம்பு படி ஏறுது’: மலைப்பாம்பு படியேறும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ