Viral Video: இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண்கிறோம். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு நபர்கள் மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாக திருமணங்கள் பார்க்கப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருக்கின்றது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சமீப காலங்களில் மணமேடையில் மணமக்களின் எண்ட்ரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மிகவும் வித்தியாசமான வகைகளில் தங்கள் எண்ட்ரி இருக்க வேண்டும் என மணமக்கள் ஆசைப்படுகிறார்கள். 


அப்படி ஒரு அசத்தலான எண்ட்ரி கொடுத்த மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில், ஒரு மணப்பெண் லாவகமாக, முழு நம்பிக்கையுடன் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை ஓட்டுவதை கான முடிகின்றது. அவர் மணமகள் அலங்காரத்தில் மிக அழகாக பைக்கை ஓட்டிக்கொண்டு வருகிறார். அவர் தனது திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு செல்வதாக தெரிகிறது. ஆனால்  இது உறுதி செய்யப்படவில்லை.


மணப்பெண் என்றாலே அச்சம், மடம், நாணம் என்ற பழையகால இலக்கணங்களை மீறி, நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் அவர் அச்சமின்றி பைக் ஓட்டுவதை காண நன்றாக இருக்கின்றது. அவர் நேர்த்தியாக பைக் ஓட்டும் அழகை அந்த சலையில் செல்லும் பிற வாகனங்களில் உள்ள அனைவரும் வியந்து பார்க்கிறார்கள். கனமான ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு அசத்தலாய் பைக் ஓட்டும் அழகை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


மாஸாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: