`பளார்’ என மெட்ரோவில் இளைஞனை அடித்த பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ
Viral Video: ‘பளார்’ என இளைஞனை அடித்த பெண்ணால் மெட்ரோ ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞனை பெண் அடிக்க காரணம் என்ன? அதுவும் மெட்ரோ ரயிலில்?
சமூக ஊடகங்கள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. நமது பல்வேறு மன அழுத்தங்களையும் சோகங்களையும் மறக்க இவை நமக்கு உதவுகின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. நம்மால் நம்ப முடியாத பல சம்பவங்கள் நிஜத்தில் நடப்பதை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் நாம் காணும் காட்சிகள் இப்படி கூட நடக்குமா என நம்மை வியக்க வைக்கின்றன. டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞனுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் நடக்கும் வாக்குவாதம் மற்றும் சண்டையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாதாரணமாக துவங்கும் வாக்குவாதம் முற்றி இருவரும் கடும் கோவத்தில் சண்டை இடுவதை வீடியோவில் காண முடிகின்றது. பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண் இளைஞனை அறைகிறார். இது மற்ற பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், சட்டையின் விலை குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது.
மேலும் படிக்க | குரங்குகளுக்கு விருந்து வைத்து இணையத்தை அழ வைத்த நபர்: வைரல் வீடியோ
தான் ஸாரா பிராண்டின் டி-ஷர்ட் ஒன்றை 1000 ரூபாய்க்கு வாங்கியதாக பெண் கூறுகிறார். ஆனால், அந்த டி-ஷர்ட்டின் விலை 150 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என இளைஞன் கூறுகிறார். பெண் கூறும் விலையை இளைஞனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமடைந்த பெண் கோபத்தில் இளைஞனை அடிக்கிறார். இதனை நிதானமாக கையாளும் இளைஞன், அந்த பெண்ணை எச்சரித்து இது ஒரு பொது இடம் என்று கூறுகிறார். எனினும், அப்போதும் பெண்ணால் தன் கோவத்தை அடக்க முடியவில்லை. அவர் மீண்டும் மீண்டும் இளைஞனை அடிக்கிறார்.
இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த வாக்குவாதத்தையும் அடிதடியையும் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் அடுத்து வரும் ஸ்டேஷனில் இருவரும் இறங்கிச் சென்று விடுகிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் பகிர்வதற்கான வேண்டுமென்றே எடுக்கப்பட்ட கேலி வீடியோவா அல்லது இருவரும் நிஜமாகவே சண்டையிட்டுக் கொண்டார்களா என்பது இதுவரை தெரியவில்லை. இந்த அதிர்ச்சி வீடியோவை மாந்தர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மெட்ரோவில் நடந்த அடிதடி வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சிலர், இவர்கள் இருவரும் உண்மையான ஜோடி என்றும் சிலர் இவர்கள் அண்ணன் தங்கையாக இருக்கக்கூடும் என்றும் கமெண்ட் செய்துள்ளார்கள். சிலரோ இவர்கள் காதலர்கள் என்று கூறியுள்ளதோடு, காதலர்களால் தான் இப்படி சண்டையிட முசியும் என்றும் அதற்கு விளக்கமளித்துள்ளார்கள். மொத்தத்தில் இணையவாசிகள் இந்த வீடியோவைப் பற்றி பல வித சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ