லக்னோ: இரண்டு சிறுமிகள் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  (Lucknow Viral Video) வருகிறது. இந்த வீடியோ உத்தரபிரதேச (Uttar Pradesh) தலைநகர் லக்னோவை சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கு ஒரு பெண் மற்றொரு பெண்ணை நடுரோட்டிலெயெ (Girl Beating) அடிப்பது தெரிகிறது. வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணை அடிப்பதும், மற்றவர்கள் அவளைக் காப்பாற்ற முயற்சிப்பதும் காணப்படுகின்றன. இந்த வழக்கு லக்னோவின் ஆஷியானா பகுதியில் நேர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடு ரோட்டில் ஓவர் டிராமா
திருமணத்தை காரணம் காட்டி இளைஞன் தன்னை முதலில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஹை வோல்டேஜ் நாடகத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


ALSO READ: Viral Photo: சீறும் மூன்று பாம்புகளா; இல்லை பட்டுப்பூச்சியா; உண்மை என்ன..!!!


போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்ற இரண்டு பெண்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அந்த இடத்தில் திரண்டிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்
குறிப்பிடத்தக்க வகையில், லக்னோவில் நடுரோட்டில் நடந்த சண்டையைப் பார்த்ததும், அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடியது, மேலும் சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 376, 504, 506, 307, 352 மற்றும் 423 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.


 



ALSO READ: Tourist Snake: இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்த கொடிய நச்சுப் பாம்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR