இன்றைய கூகுள் டூடுலில் மருத்துவர் வர்ஜீனியா அப்கர்!!
அமெரிக்க மயக்க மருந்து நிபுணர் டாக்டர் வர்ஜீனியா அப்கரின் 109-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்!!
அமெரிக்க மயக்க மருந்து நிபுணர் டாக்டர் வர்ஜீனியா அப்கரின் 109-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்!!
அமெரிக்க மருத்துவரான வர்ஜீனியா அப்கர் 'ஆஃப்கர் ஸ்கோர்' என்ற புதிய கருவியை 1952 ஆம் ஆண்டில் அறிமுகபடுத்தினார். இந்த கருவியை கர்ப்பிணிகளின் மகபேரின் பொது அவர்களுக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்துகளின் விளைவுகளை அளவிவிவதர்காக இதை உபயோகபடுத்தியுள்ளனர்.
டாக்டர் வர்ஜீனியா அப்கர் அமெரிக்காவில் 1909-ம் ஆண்டு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவர், அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி, வெஸ்ட்பீல்டு வளாகத்தில் வளந்தார். இவர், 1929 ஆம் ஆண்டில் மௌண்ட் ஹொலிலோக் என்ற கல்லூரியில் அவரது பட்டய படிப்பை முடித்தார். இதையடுத்து, அவர் 1933 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபட்டம் பெற்றார்.
மேலும், இவர் 1937 ஆம் ஆண்டில் போர்டு-சான்றிதழ் அனெஸ்தீசியாலஜிஸ்ட் என்ற பட்டத்தை முதல் பெண்மணி ஆவார். இதை தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில், வர்ஜீனியா அறுவை சிகிச்சை மருத்துவ கல்லூரியில் முதல் மயக்கவியல் பெண் பேராசிரியராக பணிபுரிந்தார்.
மருத்துவர் வர்ஜீனியா அப்கார் பிறந்த குழந்தைகளின் நலனுக்கான ஆர்வம் காட்டுபவர். இதையடுத்து இவர் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதில் அதிக ஆர்வத்துடன் செயபட்டுவந்தார். 1952 ஆம் ஆண்டில் இறுதியாக இவர் ஆஃப்கர் ஸ்கோர் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த புதிய கருவி அமைப்பு, ஐந்து நிமிடத்தில் செயல்படும். இந்த கருவி கர்ப்பிணி பெண்ணின் மற்றும் குழந்தையில் தோற்றம், துடிப்பு, முக நெளிப்பு, செயல்பாடு, சுவாசம் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் தெளிவாக குறிப்பிடும். கருவியின் அளவானது, 7-க்கு மேல் இருந்தால் இயல்பானவை, இருந்தாலும் 4 முதல் 6 வரை குறைவாக இருக்க வேண்டும். 3-க்கு குறைவாக இருந்தால மோசமான நிலையாக கருதப்படுகிறது. எனவே, குழந்தைக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.
டாக்டர் வர்ஜீனியா அப்கர் 1959 இல் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொது சுகாதாரத்தில் பட்டம் பெற்றவர். அவர் "என் மை பேபி ஆல் ரைட்?" என்ற புத்தகத்தை 1973 ஆம் ஆண்டு ஜோன் பெக் என்ற எழுத்தாளர் பெயரில் எழுதியுள்ளார். எழுதியுள்ளார். 1974, ஆகஸ்டு 7 அன்று இவருக்கு கொலம்பியா - பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் கல்லீரல் ஈரல் அழற்சி ஏற்பட்டது.
இவர் உருவாக்கிய அப்கார் ஸ்கோர் அமைப்பு, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே விரைவாக மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது குறிப்பிட தக்கது!