தீபாவளி வைரல் வீடியோ: இணையம் தனி உலகமாக இயங்கி வருகிறது ஆனால், அது பொதுவெளியில் இயங்கும் சமூக ஊடக தளம் ஆகும். இன்றைய தொழில்நுட்ப உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்டன. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள உதவும் இணையதளம் பல்வேறு விதமான அனுபவங்களை நமக்கு வழங்குகிறது என்று சொன்னால் அது தவறில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் நடன வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கின்றனர். வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது, வீடியோ ரூபத்தில் அனைவரிடம் சென்று சேர்கிறது.


கலைத்திறமையை மட்டும் அல்ல, கொண்டாட்ட மனநிலையில், தன்நிலை மறந்து நடனம் ஆடும்போது, அதுவும் வைரலாகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, பெரியவர்களும் ஜாலியாக இருக்கின்றனர்.


மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ


அந்த வகையில் , சமீபத்தில் அற்புதமாக நடனமாடும் ஒரு அமெரிக்க தூதரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில், ஏஆர் ரஹ்மானின் ’சையச் சையா’ பாடலுக்கு அவர் ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் திகைத்துப் போகின்றனர். அப்படி அழகாக ஆடி அசத்துகிறார் அமெரிக்கர். அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.   


ஜாலி நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:



டியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான X-இல் பகிரப்பட்டு, ஏகப்பட்ட லைக்குகளும், வியூஸ்களும் கிடைத்துள்ளன. பலர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான பயனர்கள் இந்த வீடியோவில் நடனமாடும் அமெரிக்கத் தூதரின் நடனத்தையும், அவரது டான்ஸ் ஆடும் லாவகத்தையும் பாராட்டி வருகின்றனர்.   


மேலும் படிக்க | கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ


பிரபலமான பாடலுக்கு அமெரிக்க தூதர் அசத்தலாக நடனமாடுகிறார். இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். ஆனால், இந்தியாவின் பிரபலமான சினிமா பாடலுக்கு அமெரிக்க தூதர் ஒருவர் நடனமாடுவது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த ட்ரெண்ட் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


தீபாவளி டான்ஸ்


"சையச் சையா" பாடலுகு பல பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் நடனமாடி அதை சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆற்புதமான டான்ஸாடும் அமெரிக்க தூதருக்கு ஒரு ஓ போடுங்க என்று அனைவரும் ஒன்றாக கூறுகின்றனர்.  


மேலும் படிக்க | என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ