சமூக வலைதள கணக்குகளை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்
வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் என நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது நாட்டில் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ இது குறித்து முடிவெடுக்க முடியாது. சமூக வலைதள கணக்குகளை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில வழிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்படும் வழிமுறைகளை குறித்து நீதிமன்றத்தில் 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக்குப்தா கூறியுள்ளார்.
இன்றைய விசாரணையில், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களை தவறாக கையாள்வதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, மத்திய அரசிடம் உச்சநீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ இது குறித்து வழிகாட்டுதல்களைச் செய்ய முடியாது. ஆனால் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். அதைத் தடுக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். சமூக ஊடகங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். எனது தனியுரிமை பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில், ஸ்மார்ட்போனை விட்டு வெளியேறவே நான் எண்ணுகிறேன் எனக் கூறினார்.
சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை எவ்வளவு விரைவில் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்பதை மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிநபர் உரிமை என்பது நாட்டின் உரிமை, கவுரம் என்றுக் கூறிய நீதிபதி, இறையாண்மைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறினார்.
மக்கள் சமூக ஊடகங்களிலும் ஏ.கே.47 ஐ வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.ஆன்லைன் குற்றவாளிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் குப்தா கூறினார். எங்களிடம் இந்த தொழில்நுட்பம் இல்லை என்று கூறி அவர்களை விட்டுவிட முடியாது. குற்றவாளிகளுக்கு நாம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.