CCTV Video : சிறுமியை கொடூரமாக தாக்கும் தெருநாய்... நேரில் பார்த்த தாய் அதிர்ச்சி
Stray Dog Attack Viral Video: தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தெருநாய் ஒன்று திடீரென தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.
Stray Dog Attack Viral Video: சமீப காலங்களில் நாய்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியை சுற்றிய சில பகுதிகளில் ஒரு சில நாய் வகைகளை மாநகராட்சி தடை செய்துள்ளது.
தற்போது மற்றொரு நாய் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் ஹன்ஸ்புரா மாவட்டம் சூரத்தில் ஒருவரை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெருநாய் கடித்ததால் பலத்த காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியிருப்பு கட்டடத்தின் பிரதான வாயிலில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தெருவில் ஓடிக்கொண்டிருந்த நாயை, சிறுமி சீண்டும் விதமாக செய்கை செய்தார். அந்த நாய் திடீரென ஓடிவந்து சிறுமி மீது பாய்ந்து கடித்தது. இதனால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிறுமியை தொடர்ந்து அந்த நாய் தாக்கியது. வலியால் சாலையில் புரண்ட அந்த சிறுமியை, அந்த நாய் விடாமல் தாக்கியது.
சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் தாயார் நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டார். இருப்பினும் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து பயமுறுத்தியது. தாயார் தகுந்த நேரத்தில் வந்ததால், சிறுமி பெரும் ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட காயத்தால் முகத்தில் மட்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வைரலாகியும் வரும் அந்த வீடியோ பார்ப்போரை மிகவும் அச்சமடைய வைத்துள்ளது. தெரு நாய்களை உரிய முறையில் கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்துகள் கூறப்படுகின்றன.
மேலும் படிக்க | பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ