மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் GV பிரகாஷ் இறங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...



"கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறிவிட்ட நிலையில் தற்போது மீதம் இருக்கும் அரசு பள்ளிகளையும் மூடிவிட்டால், அடுத்த 5 வருடங்களில் ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி என்பது கேள்விகுறியாகி விடும்.


உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் தான். சமீப கணக்கெடுப்பின் படி 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர்.


நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன். 


எனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.